Home » » வாழ்க்கை தத்துவ வரிகள்

வாழ்க்கை தத்துவ வரிகள்

தத்துவ வரிகள்

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை தீமையையும் விரட்டுகிறது

 அசை போட்டு தின்னுவது மாடு
அசையாமல் தின்னுவது வீடு

 பறக்க விரும்புபவனால் படர முடியாது

 பசுவின் மடியில் கொசு கடித்தாலும் அது குடிப்பது பாலையல்ல அதன் இரத்தத்தை

 குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

 ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. – ப்ரெட்ரிக் நீட்சே

 சுயநலம் என்பது சிறு உலகம்.
அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

 வெற்றியின் ரகசியம் – எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

 அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

 நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

 கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி

 செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும். ?

பெண்

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்

  கிராமத்து பெண்ணின் முகத்தில் புன்நகை
நகரத்து பெண்ணின் கழுத்தில் நகை

 சேற்றில் நின்று நாற்று நடும்
கிராமத்து பெண்களின் பாட்டில் சேறில்லை

 அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம் இரண்டாமவள் ஒரு புதையல்

 ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்

 பெண் இல்லாத வீடும் வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!

 பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள்.
ஒன்று அழகானவர்கள்.மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் – பெர்னாட்ஷா

 அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. – ஹாபர்ட்

 பெண் இல்லாத வீடும்,
வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! – பாலஸ்தீனப் பழமொழி

ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். – வின்ஸ்டர் லூயிஸ்



பணம்

 பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது

 செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

 எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால், ஒரு புத்திசாலியால்தான் அதனைக் காப்பாற்ற முடியும்.

செல்வந்தனாக வேண்டும் என நினைத்தால் அதன் தாயாகிய ஆடம்பர குணத்தை முதலில் ஒழுத்துவிடு

 பணத்தைக் கொண்டு நாய் வாங்கிவிடலாம்; ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்

 சேரக் கூடாதவனிடம் சேர்ந்தால் பணமும், பதவியும் மோசமான வியாதிதான்

 பணம் அறிவாளிகளுக்குத் தொண்டு செய்யும். முட்டாள்களை ஆட்சி செய்யும்

 பணம் பேசத் தொடங்கினால் உலகம் வாயை மூடிக் கொள்ளும்.

ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன். கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன்

 பணம்
நேற்று உன்னிடம்
இன்று என்னிடம்
நாளை யாரிடம்….?

 இளமை – முதுமை

இனியும் வேண்டும் என்பது இளமை
இனியும் வேண்டாம் என்பது முதுமை

இனி எப்போ விடியும் என்பது இளமை
இனி ஏன் விடிகிறது என்பது முதுமை

மறக்க வேண்டாததை மறந்து விடுவது இளமை
மறக்க வேண்டியதை மறக்காமல் இருப்பது முதுமை
இனித்தான் இனிமையான வாழ்வு என்பது இளமை
இனித்தான் கசப்பான வாழ்வு என்பது முதுமை
மறைக்க வேண்டியதை மறைக்காதது இளமை
மறைக்க வேண்டியதை மறைப்பது முதுமை
வாழும் காலம் இனிமை என்பது இளமை
வாழ்ந்த காலம் இனிமை என்பது முதுமை

சில்லறை தேடி அலைய நினைப்பது இளமை
கல்லறை தேடி அலைய நினைப்பது முதுமை

வாழ்க்கை

> வாழ்க்கை என்றல் ஆயிரம் இருக்கும்
> வாசல் தோரும் வேதனை  இருக்கும்
> வந்த துன்பம் எதுவென்றாலும்
> வாடி நின்றால் ஓடுவதில்லை
> உனக்கும் கிழே உள்ளவர் கோடி
> நினைத்து பார்த்து நிம்மதி நாடு!

வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோ, அதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை. வாழ்வை அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள்.

 பால்மணம் மாறும் முன் இளமை வந்தது
இளமை பூத்த போதே கடமை வந்தது

கடமை முடியும் முன்னே முதுமை வந்தது
இத்தனை வருடம் கழித்து திரும்பி பார்த்தேன்

ஒன்றும் இல்லை அங்கே

இன்பம் துன்பம் கலைந்த பின் எல்லாம் வெறுமை

உரித்து பார்த்த பின் ஒன்றும் இல்லாமல் போன
உதவாத வெங்காயமா என் வாழ்க்கை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக