Home » » பண்டத்தரிப்பு பானாவெட்டி அம்பாள் ஆலயம்

பண்டத்தரிப்பு பானாவெட்டி அம்பாள் ஆலயம்

கஜபாகு மன்னன் கண்ணகி சிலையை சம்பில் துறைமுகத்தில் இறக்கி சுழிபுரம் பறாளைக்கு அருகாமை வழியாகக் கொண்டு வரும்போது தாங்கள் தங்கிய இடங்களில் கண்ணகி சிலையை வைத்து வழிபட்டனர். பறாளை வழியாக மாதகல் பாணாவெட்டி குளத்திற்கு பக்கத்தில் வைத்து வழிபட்ட இடத்தில் கண்ணகை அம்மன் ஆலயம் முதன் முதல் கட்டப்பட்டது. அன்று தொடக்கம் பாணாவெட்டி அம்மன் ஆலயம் என்று பெயர் வழங்கி வருகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் அமைந்த ஆலயம் இது தீர்த்தக் கேணி பானாவெட்டிக்குளம் மூலஸ்தானத்தில் கண்ணகி சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டது. மாமரம் தல விருட்சமாக இருந்தது. இந்தமரத்தில் பல வர்ணங்களையுடைய மாங்காய்கள் காய்க்கின்றன என்பது ஐதீகம். பங்குனி மாதத்தில் வருகின்ற உத்தர
நட்சத்திரத்திற்கு தேர்த்திருவிழா நடைபெறுகின்றது. வருடா வருடம் திருவிழா பன்னிரு தினங்கள் நடைபெறுகின்றது. நாவலர் சைவ சமயத்தின் ஆகம விதிப்படி கற்குடைய பெண் தெய்வம் மூலஸ்தானத்தில் இருப்பது தகாது என்று புவனேஸ்வரி சிலையை பிரதிஸ்டை செய்தார். அதன் பின் கண்ணகி சிலை வடமேற்கு திசையில் வெளிவீதியில் பிரதிஸ்டை செய்து வழிபடப்படுகின்றது.
சம்புல் துறைமுகம் 2ம் நூற்றாண்டுக்கு முன்னரே துறைமுகமாக விளங்கியது. கஜபாகு மன்னன் கண்ணகி சிலையை கொண்டு வந்து இறங்கியதும், அதன் பின் அசோகன் காலத்தில் சங்கமித்தை புத்தரின் சின்னமாகிய வெள்ளரசக் கிளையை கொண்டு வந்து சம்புல் துறைமுகவழியாக அனுராதபுரம் சென்றான் என்பதை மகாவம்சம் கூறுகின்றது. சம்புல் துறைமுகத்தின் தென் புறபாக கடலருகில் திருவடி என்ற புண்ணிய தலம் உண்டு. இதில் பறாளை முருகன், பொன்னாலை வரதராஜப் பெருமான் தீர்த்தத் pருவிழா வருடம் தோறும் நிகழ்கின்றது. இராமன் பாதம் பட்ட காரணத்தால் திருவடி நிலை என்ற பெயர் வந்தது என்பர். இராவணன் ஆட்சி செய்த காலத்தில் நாகர் நாகரீகம் பெற்ற சம்புல் துறையில் ஒரு சம்பு இலிங்கேஸ்வரர் என்ற pவாலயம் இருந்தது. அது அழிந்து கடற்கரையில் திடலாக காணப்பட்டதால் திருவடி நிலையும், சம்புல் துறையும் ஆதிகாலத்தில் வாழ்ந்த நாகர் வம்சத்தின் நாகரீக வாழ்விற்கு உறுதுனையாயின. மாரீசன் கூடல் மாதகலில் வடகிழக்கு திசையில் உள்ளது. சீதை தேடிய மாரீசன் தங்கிய இடம் மாமீசன் கூடல் என்று வழங்கலாயிற்று. புவனேஸ்வரி அம்மன் ஆலயம் புனரமைக்க முன் கண்ணகி அம்மன் ஆலயமாக இருந்தது. சங்கமித்திரை தனது துணைவியாருடன் சம்புல் துறைமுகம் வழியாக ந்திறங்கியமை மாது அகல் மாதகல் என்ற பெயர் இக்கிராமத்திற்கு வந்ததென்பர். அறிஞர்கள் எமது கிராமத்திற்கு பாணாவெட்டி அம்மன் ஆலயமும் பழமையானது என்பதை முற்கூறிய சான்றுகளால் உரைக்கக்கூடியவையாயின.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக