நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழக குளிர்கால ஒன்றுகூடல் - 2018


நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழக  குளிர்கால ஒன்றுகூடல் - 2018 

படித்ததில் பிடித்த தத்துவ நகைச்சுவைகள்

ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"

நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.

நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:

"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."
=========================
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.
=========================
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.
=========================
2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.
=========================
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்.
=========================
ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு.

கேரளா: நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை: செழுமையான கன்னங்கள்
பஞ்சாப்: பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது
=========================
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
=========================
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
=========================
ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்
என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!
=========================
உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!
=========================
அன்பு தமிழ் நெஞ்சங்களே!
உங்கள் கருத்தை வெளிப்படையாக கூறுங்கள்.

படித்ததில் பிடித்த தத்துவங்கள்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
=========================
மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.
=========================
நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
=========================
(தேர்வு அறையில்)

ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.
=========================
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
=========================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.
=========================
ஒண்ணு + ஒண்ணு = ரெண்டு
நீதான் எனக்கு ஃபிரெண்டு.

ரெண்டு + ரெண்டு = நாலு
நீ ரொம்ப வாலு.

மூணு + மூணு = ஆறு
நீ இல்லாம போரு.

நாலு + நாலு = எட்டு
எஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.
=========================
நட்பு எனும் கலையானது,
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது.
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.
=========================
கடவுள்,
நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர்.
ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத
மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.
=========================
30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!
=========================
உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ
=========================
எனக்கு இட்லியைப் பிடிக்காது
தோசையைத்தான் பிடிக்கும்.
ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.
தோசை சிங்கிளாத்தான் வேகும்.
கூல்...
=========================
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
=========================
எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி
=========================
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.

கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
=========================
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
=========================
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
=========================
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
=========================
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்
=========================
எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.
=========================
இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!
=========================
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.
=========================
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

வாழ்க்கை தத்துவ வரிகள்

தத்துவ வரிகள்

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை தீமையையும் விரட்டுகிறது

 அசை போட்டு தின்னுவது மாடு
அசையாமல் தின்னுவது வீடு

 பறக்க விரும்புபவனால் படர முடியாது

 பசுவின் மடியில் கொசு கடித்தாலும் அது குடிப்பது பாலையல்ல அதன் இரத்தத்தை

 குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

 ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. – ப்ரெட்ரிக் நீட்சே

 சுயநலம் என்பது சிறு உலகம்.
அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

 வெற்றியின் ரகசியம் – எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

 அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

 நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

 கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி

 செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும். ?

பெண்

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்

  கிராமத்து பெண்ணின் முகத்தில் புன்நகை
நகரத்து பெண்ணின் கழுத்தில் நகை

 சேற்றில் நின்று நாற்று நடும்
கிராமத்து பெண்களின் பாட்டில் சேறில்லை

 அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம் இரண்டாமவள் ஒரு புதையல்

 ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்

 பெண் இல்லாத வீடும் வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!

 பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள்.
ஒன்று அழகானவர்கள்.மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் – பெர்னாட்ஷா

 அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. – ஹாபர்ட்

 பெண் இல்லாத வீடும்,
வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! – பாலஸ்தீனப் பழமொழி

ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். – வின்ஸ்டர் லூயிஸ்பணம்

 பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது

 செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

 எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால், ஒரு புத்திசாலியால்தான் அதனைக் காப்பாற்ற முடியும்.

செல்வந்தனாக வேண்டும் என நினைத்தால் அதன் தாயாகிய ஆடம்பர குணத்தை முதலில் ஒழுத்துவிடு

 பணத்தைக் கொண்டு நாய் வாங்கிவிடலாம்; ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்

 சேரக் கூடாதவனிடம் சேர்ந்தால் பணமும், பதவியும் மோசமான வியாதிதான்

 பணம் அறிவாளிகளுக்குத் தொண்டு செய்யும். முட்டாள்களை ஆட்சி செய்யும்

 பணம் பேசத் தொடங்கினால் உலகம் வாயை மூடிக் கொள்ளும்.

ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன். கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன்

 பணம்
நேற்று உன்னிடம்
இன்று என்னிடம்
நாளை யாரிடம்….?

 இளமை – முதுமை

இனியும் வேண்டும் என்பது இளமை
இனியும் வேண்டாம் என்பது முதுமை

இனி எப்போ விடியும் என்பது இளமை
இனி ஏன் விடிகிறது என்பது முதுமை

மறக்க வேண்டாததை மறந்து விடுவது இளமை
மறக்க வேண்டியதை மறக்காமல் இருப்பது முதுமை
இனித்தான் இனிமையான வாழ்வு என்பது இளமை
இனித்தான் கசப்பான வாழ்வு என்பது முதுமை
மறைக்க வேண்டியதை மறைக்காதது இளமை
மறைக்க வேண்டியதை மறைப்பது முதுமை
வாழும் காலம் இனிமை என்பது இளமை
வாழ்ந்த காலம் இனிமை என்பது முதுமை

சில்லறை தேடி அலைய நினைப்பது இளமை
கல்லறை தேடி அலைய நினைப்பது முதுமை

வாழ்க்கை

> வாழ்க்கை என்றல் ஆயிரம் இருக்கும்
> வாசல் தோரும் வேதனை  இருக்கும்
> வந்த துன்பம் எதுவென்றாலும்
> வாடி நின்றால் ஓடுவதில்லை
> உனக்கும் கிழே உள்ளவர் கோடி
> நினைத்து பார்த்து நிம்மதி நாடு!

வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோ, அதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை. வாழ்வை அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள்.

 பால்மணம் மாறும் முன் இளமை வந்தது
இளமை பூத்த போதே கடமை வந்தது

கடமை முடியும் முன்னே முதுமை வந்தது
இத்தனை வருடம் கழித்து திரும்பி பார்த்தேன்

ஒன்றும் இல்லை அங்கே

இன்பம் துன்பம் கலைந்த பின் எல்லாம் வெறுமை

உரித்து பார்த்த பின் ஒன்றும் இல்லாமல் போன
உதவாத வெங்காயமா என் வாழ்க்கை

தாயம் விளையாட்டு தோற்றம், வளர்ச்சி

தாய விளையாட்டு பெண்கள் விளையடும் அக விளையாட்டுகளில் முக்கியமானது ஆகும். தாய விளையாட்டின் தோற்றம் போரில் படை வீரர்களை நகர்த்தி செல்வது போன்ற செயல்களை வெளிப்படுத,துவதாக அமைகிறது. கட்ட விளையாட்டின் பண்புகள், அதிகளவில் தாய விளையாட்டில் காணப்படுகிறது. ஆனால் ஆண்கள் விளையாடும் தாயகட்ட விளையாட்டு அறிவுத்திறனை மையமாகக் கொண்டது. பெண்கள் விளையாடும் தாயகட்ட விளையாட்டு வாய்ப்பு நிலையை மையமாக்க் கொண்டது. இவ்விரு விளையாட்டுகளும் போர் முறைகளை விளக்குவதாக அமைந்துள்ளன.கட்ட விளையாட்டிலிருந்து தாய விளையாட்டு வேறுபட்டிருந்தாலும், கட்ட விளையாட்டின் வளர்ச்சி தாய விளையாட்டின் தோற்றத்திற்கு உதவியாக இருந்திருக்ககூடும். தாய விளையாட்டிலிருந்து பகடை, தசாபதம், அஷ்டாபதம், சதுரங்கம், (செஸ்) தோன்றி இருப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. குறைந்தது இரண்டு பேர்கள் விளையாடும் விளையாட்டு இது.

பெயர்க்காரணம் :

' தாயம் ' என்ற சொல்லுக்கு 'உரிமை' என்று பொருள் உண்டு. உறவுகாரர்களை தாயத்தார் என்று கூறுவது இதற்குச் சான்றாகும்்இதைப் பற்றிய குறிப்புகள்
தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் பந்தயம் கட்டுவார்கள். அப்பந்தயம் பொருள் தங்களை வந்தடைய வேண்டுமென்று உரிமை கருதி ஈடுபடுவதால் 'தாயம்' என்ற பெயர் வந்திருக்கலாம்.சோழிகளை குலுக்கி போடுகையில் 'ஒன்று' விழுந்தால் 'தாயம்' என்று கூறுகின்றனர். ஆனால் மற்ற எண்களை இரண்டு, மூன்று என்றறே கூறுவது குறிப்பிடதக்கதாகும்.நடைமுறையில் நாம் ஒரு செயலைக் காணலாம். ஒரு தொழிலைத் தொடங்கும் போது 'இலாபம்' என்று கூறுகின்றனர் அவற்றை போலவே தாயம் என்ற சொல்லும் தானே வெற்றி பெற வேண்டும்.என்ற ஒரு சொல்லாகவும் நாம் இதைக்கருதலாம்.

விதிமுறைகள் :

சோழியில் முதலில் 'தாயம்' போட்டால்தான் காய்களை கட்டத்தில் வைத்து தொடங்க முடியும்.சோழிகளில் விழும் எண்களுக்குத் தகுந்தவாறு வலப்புரமாக காயினை நகர்த்தி வரலாம். எதிரியின் காய்களை குறியீடு இல்லாத கட்டங்களில் சுற்றும்போது வெட்டிவிடவேண்டும்.ஒருவர் காயிருக்கும் கட்டத்தில் இன்னொருவரின் காயினை வைக்க நேர்ந்தால் அதற்கு வெட்டுதல் என்று பெயர்.வெட்டினால்தான் காய் உள்கட்டத்திற்குள் செல்லவியலும். குறியிடப்பட்ட கட்டம் எவருக்கும் சொந்தமில்லை. யாருடைய காய் வேண்டுமனாலும் குறியீட்டுக் கட்டத்தில் தங்கலாம். நான்கு அல்லது ஆறு காய்களை யார் முதலில் பழமாக்குகின்றாரோ அவர் வெற்றி பெற்றவராவார்.மேலும் இந்த விதிமுறைகள் ஒவ்வொரு வகை தாய வரைபடத்திற்கேற்ப மாறுபடும்.

நான்கு சோழிகள் எண்ணிக்கை விதிமுறை எண்ணிக்கை
1. நான்கு சோழியும் கவிழ்ந்திருந்தால் 8
2. மூன்று கவிழ்ந்து ஒன்று திரும்பியிருந்தால் 1
3. இரண்டு கவிழ்ந்தும் இரண்டு திரும்பியிந்தால்2
4. ஒன்று கவிழ்ந்திம் மூன்று திரும்பியிருந்தால் 3
5. நான்கு சோழியும் திரும்பியிருந்தால் 4

இவற்றில் 8,1,4 விழுந்தால் மீண்டும் ஆட வாய்ப்புண்டு இவ்விதிமுறை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும்.

வகைகள் :

தமிழக கிராம்ப்புரங்களில் தாய விளையாட்டில் பல வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஐந்து வகைகள் குறிப்பிடத்தக்கவை. நான்கு கட்ட தாயம், தஞ்சாவூர்க் கட்டம், குரங்காட்டம் போன்றாவையாகும்.

பயன்கள் :

தாய விளையாட்டின் வாயிலாக பல அறிவுத்திறன் சார்ந்த செயல்கள் அதிகரிக்கின்றன. காய்களை நகர்த்துவதற்கு நுண்ணிய அறிவுத்திறன் தேவைப்படுகிறது. எதிரியின் காய்களை வெட்டுவதற்கு அதிகமான சிந்தனைத்திறன் தேவைப்படுகிறது. கணித அறிவு வளர்வதற்கும் தாய விளையாட்டு உறுதுணையாக அமைகிறது. தாய விளையாட்டில் அறிவுத் திறன் மட்டுமின்றி வாய்ப்புநிலை இயல்பும் உள்ளடங்கியது என்று குறிப்பிடத்தக்கது.

உலக மகளிர் தினம்

மார்ச்; 8 ஆம் திகதியை
உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகின்றோம். வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றித் தினமே இந்த மகளிர் தினமாகும்.
மனிதனை வழிநடத்திச் செல்வது கண்கள். நாட்டை ஒளிபெறச் செய்வது பெண்கள். இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.
இனம், மொழி, பொருளாதாரம், அரசியல் முதலிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடியதைக் குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச மகளிர் தினமாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம்
மார்ச் 18இ 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 105 வருடங்கள் முடிவடைந்து விட்டன.
பிரெஞ்சுப் புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்திரம்இ சம உரிமைஇ அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதித்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கியிருந்தனர். எட்டு மணி நேர வேலைஇ வேலைக்குத் தகுந்த கூலிஇ அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சிச் செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன.
அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று படிப்படியாக உணரத் தொடங்கினர்.
1913 ஆம் வருடம் முதல் மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இத்தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாக கொண்டாடலாம். ஆனால் இத்தினத்துக்கு காரணமான போராட்டங்களும் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமூதாயத்திருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.
மகளிரைத் தமது தாயாகவும்இ சகோதரிஇ மனைவிஇ மகள்இ உறவுப் பெண் எனக் கொண்டிருக்கும் ஆண் வழிச் சமுதாய ஆண்கள் தமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமான இப்பாலினத்தை உரிய முறையில் நடத்துகின்றோமா எனச்சிந்திக்க கிடைக்கும் நாள் மட்டுமல்ல பெண்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கவும்இ பெண்கள் தொடர்பான மூட நம்பிக்கைகளை அகற்றவும் அவர்களை அதிக பட்ச விழிப்புணர்வு கொண்டவர்களாகவும் செயல் திறன் உரியவர்களாகவும் மாற்றி அமைக்கும் நாள் இது.
இந்த தினம் தங்களது குடும்பம்இ சமுதாயம் இ சமூகம்இ நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ள சாதாரண பெண்களின் முனைப்பை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது.
எமது அயல்நாடான பாரதத்தில் முன்னர் கல்வி கற்றவர் குறைவு. அதிலும் பெண்கள் மிகக் குறைவு. அக்காலகட்டத்தில் வாழ்ந்த ஒளவையார்இ காரைக்காலம்மையார்இ ஆண்டாள் என்னும் புலவர்களின் படைப்புகளால் பெண்மை மேன்மை அடைந்தது என்று கூறலாம்.
பாரதி வகுத்த புதுமைப் பெண்ணின் தாற்பரியத்தினால் பெண்கள் தங்கள் தடைகளைக் கடந்து முன்னேறினர். பால்ய விவாகம்இ உடன் கட்டை ஏறுதல்இ வீட்டினில் வழங்கப்பட்ட சிறைவாசம்இ வரதட்சனை கொடுமை என்பன தகர்க்கப்பட்டன.
பெண்களின் உயர்விற்கு காந்தியடிகள்இ பாரதிதாசன்இ மோகன்ராய் போன்றோர் குரல் கொடுத்தனர். சீர்திருத்தங்களே பெண்மைக்கு ஏற்படும் மாற்றங்கள் எனும் உண்மையை எடுத்துக் காட்டினர். அவ்வழியேதான் பெண்கள் தங்கள் கால் தடங்களைப் பதித்து வருகின்றனர். பெண்கள் தங்கள் முன்னேற்றத்தால் உயர்வு பெற்றாலும் இன்னும்; அவர்கள் முற்றிலுமாக முன்னேற்றமடையவில்லை.
ஐரோப்பியஇ அமெரிக்க நாடுகளில் பெண்கள் முன்னேறியிருப்பது போலத் தோன்றினாலும் இது மிகவும் சிறுபான்மைதான். மூன்றாவது உலகம் என்று சொல்லப்படும் நாடுகளில் பெண்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. பெரும்பான்மையான பெண்கள் தங்களது தினசரி வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகவே அதிகப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு பெண்கள் சுதந்திரம்இ பாலியல் விடுதலை என்பது புரியாதஇ அவர்களுக்கு சம்மந்தப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
1975 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டில் நடந்த சர்வதேச மகளில் மாநாட்டில் அடித்தட்டுப் பெண்களுக்கும்இ மேல்வர்க்கப் பெண்களுக்கும் இடையே பூதாகரமான இடைவெளி இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியது. இந்த அடித்தட்டுப் பெண்களில் பெரும்பாலோர் எழுத்தறிவு இல்லாமலும்இ போஷாக்கு குறைந்தவர்களாகவும்இ வளர்;ச்சியடையாத கிராமப் பகுதிகளில் இருப்பவர்களாகவும்இ ஏழ்மையிலும்இ உடல் நலக்குறைவிலும் சிக்கித் தவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையிலும்கூட வளர்ந்துவரும் நாடுகளான இந்தியாஇ ஸ்ரீலங்கா முதலிய நாடுகளில் பொறுப்பான அரசியல் பொறுப்புகளை பெண்கள் ஏற்று நடத்தி வருவது ஒரு நல்ல அறிகுறியாகவே தெரிகிறது. இதனால் பெண்கள் சுதந்திரம் என்பது ஒரு மேற்கத்திய மந்திரச்சொல்;லாக மட்டுமல்லாமல் வளர்ந்துவரும் நாடுகளிலும் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒரு பெண்பிள்ளை சிறு வயது முதல் வளர்க்கப்படும் சூழலைப் பொறுத்தே அவளுடைய ஆழுமை அமைகின்றது. ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் அடக்கப்பட்டு வளர்க்கப்படும் ஒரு குழந்தையினால் பிற்காலத்தில் தனது உரிமைகளுக்காகப் போராடி வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆழுமை குறைந்தவர்களே நாளடைவில் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
பால்நிலைப்பாடு காரணமாக மகளிர் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். பெண்களைத் தாயாகஇ இல்லாளாகஇ துணைவியாகஇ தர்மபத்தினியாகஇ செவிலித்தாயாக பல்வேறு உருவங்களில் வீட்டிற்குரியவர்களாக ஆக்கிக் கொண்ட சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற வன்முறைகளும் குறைந்தபாடில்லை என்று கூறினாலும் மிகையாகாது.

ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்செயல்களை இல்லாதொழித்தல் தொடர்பான உடன்படிக்கையை இலங்கை 1981 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் பெண்கள் பாரபட்சங்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமைஇ அரசியலில் பங்குபற்றுதல்இ கல்விஇ வேலைவாய்ப்பு பெறும் உரிமை போன்ற பல்வேறு உரிமைகளைக் குறிக்;;கின்றது.
பொதுவாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பெண்களின் நிலை கேள்விக்குறியாக இருந்தாலும் எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிடத்தக்க சிறந்த நிலையை அடைந்துள்ளார்கள் என்பதற்கு பல உதாரணங்களைக் கூறலாம்.
இலங்கையிலுள்ள பிரதான காவல்துறை நிலையங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நலத்தை கவனிப்பதற்கு விசேட பிரிவுகள் உள்ளன. பொலிஸ் நிலையங்களிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பிரிவு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்வதைஇ பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்கள் பெண் பொலிசாரிடம் முறையிடுதல் இடம்பெறுகிறது. இது சுமார் ஒரு தசாப்த காலத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது.
மருத்துவ நிலையங்களில் தாதிமார் மற்றும் ஆசிரியர்இ ஆயாதொழிலில்இ குழந்தை வளர்ப்பு மையங்களில் பெண்களுக்கே முதலிடம் தருகின்றனர்.
ஆரம்ப பாடசாலைகளில் ஆசிரியைகளாக பெரும்பாலும் மகளிரையே கல்வி அமைச்சு நியமிக்கின்றது. குழந்தைகள் அழுதால்கூட அதனைப் பொறுத்திடும் பண்பு பெண்களிடம் மட்டுமே காண முடிகின்றது. பொதுவாக பாலர்கள் மேல் கோபம் எழாதவாறு பொறுமை காக்க செய்கின்றது.
மருத்துவராகஇ பொறியியலாளராகஇ துணை வேந்தராகஇ நீதிபதியாகஇ பிரதம மந்திரியாகஇ ஜனாதிபதியாக பல்வேறு அதி உன்னத பொறுப்புக்களிலிருந்து தமது செயற்திறனைக் காட்டி பெருமை பெற்றுத் திகழ்பவள் பெண் ஆவாள்.
அன்றைய கால கட்டத்தில் வாக்குரிமை வழங்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுந்த போதே பெரும்பாலான ஆண்கள் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர். எனினும் அன்றைய பெண்கள் வாக்குரிமைச் சங்கம் அமைத்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சி அளித்தனர். அதில் வெற்றியும் கண்டனர். 1931 ஆம் ஆண்டு இலங்கை சட்ட சபைக்கான முதலாவது பெண் பிரதிநிதி தெரிவானார்.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெண் பிரதிநிதிகளின் தொகை 12 ஆக அதிகரித்தது. 2004 இல் இலங்கை பாராளுமன்றத்திற்கு சிங்களஇ தமிழ்இ முஸ்லிம் பெண் உறுப்பினர்கள் தெரிவானார்கள்.
இலங்கை அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தற்போதைய அரசு திட்டமி;ட்டுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றிலே பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தியமை புதிய பிரவாகம் என்றே சொல்ல வேண்டும். அவ்வாறே அந்த நல்லாட்சியில் பெண்குலத்தின் அவலங்களும் நீக்கப்படும் என்றே பெண்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இலங்கையின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்ற திருமதி சிறிமாவோ பண்டார நாயக்க உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்புப் பெயரையும் தட்டிக் கொண்டார். இவ்வாறாக பெண்களின் இன்றைய நிலையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பெண்ணின் உடலமைப்பு இன்னொரு உயிர் ஜனனிக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. இது இறைவன் அவளுக்களித்த கொடையாகும்.
எது எவ்வாறிருப்பினும் மனித உரிமைகள்இ பெண் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு பெண்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். கல்வியை இடைநிறுத்திய பெண்கள் தமது படிப்பை தொடர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். குறிப்பாக பெண் பிள்ளைகள் சிறு வயது முதலே ஆரோக்கியமான சூழலில் வளர்க்கப்பட வேண்டும். மனவலிமையும்; சக்தி நிறைந்தவர்களுமாக பெண் பிள்ளைகளை வளர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் இவர்கள் அனைத்து உரிமைகளையும் கொண்ட சிறந்த பிரஜைகளாக உருவாக்க முடியும்.
இந்த ஆண்டிற்கான மகளில் தின கருப்பொருளாக ஐ. நா. முன்மொழிந்திருக்கும் நோக்கம் ‘ பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்க கொண்டு வர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம்’என்பதே.
உலகெங்கும் உள்ள பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்.

பெண் உரிமை எவ்வாறு பேணப்படுகிறது

 தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமை எவ்வாறு பேணப்படுகிறது என்பது ப
ற்றியதாகும். தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் உரிமை கால அடிப்படையிலும், உள் பிரிவுகள் அடிப்படையிலும் பெரிதும் வேறுபடுகிறது.

பண்டைத் தமிழகத்தில் தமிழகத்தில் பெண் உரிமைகள் ஓரளவு பேணப்பட்டது என்றும், இடைகாலத்தில் அது பறிக்கப்பட்டு, தற்காலத்தில் மீண்டும் உறுதிசெய்யப்படுவதென்பது ஒரு பார்வை. இதை மறுத்து தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து ஆண் ஆதிக்கதுக்கு உட்பட்டே இருந்தனர் என்றும் தற்காலத்திலேயே பெண் உரிமைகளில் பெரும் மாற்றம் நிகழுகின்றது என்பதும் இன்னோர் பார்வை.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் பெண் புலவர்காள் செய்யப்பட்டவை. மொத்த புலவர்களுடன் ஒப்புடுகையில் பெண்களின் பங்கு மிகச் சிறிதே. எனினும் இது ஒரு பெண்கள் அக்கால சமூகத்தில் கல்வி, கலைகள் ஆகியவற்றில் மேன்மை பெறமுடியும் என்பதைக் காட்டுகிறது.

தமிழ்ச் சமூகத்தில் உள்ள பெண் தெய்வ வழிபாடும், பெண்கள் இழிவு நிலையில் வைத்திருக்கப்படவில்லை என்பதற்கு சான்றாக கொள்ளப்படுகிறது. பெரும்பான்மைச் சமயங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டை இறையை ஆணாக மட்டும் சித்தரிக்கையில், பெண் தெய்வ வழிபாடு ஒரு வேறுபட்ட சிந்தனையை சுட்டி நிக்கிறது.

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர்

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சிறந்த புண்ணியஸ்தலங்களில் ஒன்றாகும். இதில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் சித்தி விநாயக விக்கிரகம் மிகவும் பழமை வாய்ந்தது.

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சிறந்த புண்ணியஸ்தலங்களில் ஒன்றாகும். இதில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் சித்தி விநாயக விக்கிரகம் மிகவும் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் இற்றைக்கு ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் பெரிய பிரக்ராசிரியார் என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீமான் விஸ்வநாதர் காசிப்பிள்ளை அவர்களால் திரும்பவும் புதிதாகக் கட்டுவிக்கப்பட்டு ஆங்கில வருடம் 1915 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர்சித்தி விநாயக விக்கிரகம் இந்தியாவிலுள்ள தொண்டை நாட்டிலிருந்து யாழ்பாடியின் காலத்தில் அவரின் முதலமைச்சர் சேதிராயரின் வேண்டுகோளின் படி கச்சிக் கணேசையர் என்னும் பிராமணோத்தினரால் கொண்டு வரப்பட்டது. என்றும் அதுவே இப்போது அரியாலையிலுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டிருப்பது போலும். என்று யாழ்ப்பாணச் சரித்திர நூலாசிரியருள் ஒருவரான ஸ்ரீமான் ஆ.முத்துத்தம்பிப்பள்ளை அவர்கள் கூறிப்போந்தார். (யாழ்ப்பாணச் சரித்திரம் பக்கம் 11)

யாழ்ப்பாடியின் காலம் கி.மு 2ஆம் நூற்றாண்டு சில சரித்திர நூலாசிரியர்கள் கூறி நிற்க வேறு சிலர் அதனை மறுத்து கி. பி 10 ஆம் நூற்றாண்டு என்று வரையறுத்துள்ளனர். பிந்தியோர் கூற்றிலிருந்து பார்த்தாலும் கச்சிக் கணேசையரால் கொண்டு வரப்பட்ட சித்தி விநாயகர் விக்கிரகம் இற்றைக்கு ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தில் பிரதிட்டை செய்யப்பட்டு விட்டது என்பதற்கு சந்தேகமே இல்லை. ஆனால் அது அப்போது பிரதிட்டை செய்யப்பட்ட இடம் எது என்பது திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை. இப்போது அவ்விக்கிரகம் இருக்கின்ற அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலிலே அவ் இடம் எனச் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர்.

யாழ்ப்பாடியின் இராசதானி யாழ்ப்பாணமாய் இருந்தாலும் அவரின் முதலமைச்சர் சேதிராயரால் சித்தி விநாயகருக்கு ஓர் ஆலயம் கட்டுவிக்கப்பட்டமையாலும் அவ்வாலயம் யாழ்ப்பாண இராசதானியிலே அல்லது அதற்கு அயலிலே கட்டுவிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று துணிதல் பொருத்தமுடையதாகும்.

யாழ்ப்பாண நகரப்பகுதியிலெ அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலைப் போன்ற பழமையான வேறோர் சித்தி விநாயகர் கோயில் இல்லாமையாலும், அரியாலை சித்தி விநாயகர் கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் விநாயக விக்கிரகத்தின் அங்க அமைப்புக்கள் யாவும் பழங்காலச் சிற்பங்களோடு ஒத்திருப்பதனாலும் கச்சிக் கணேசையராலும் கொண்டு வரப்பட்ட சித்தி விநாயக விக்கிரகம் அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் விக்கிரகமே எனத் துணிதல் சாலும்.

யாழ்பாடியின் பின் யாழ்ப்பாணம் சிலகாலம் அரசற்ற நாடாயிருந்து பின்னர் கி.பி 16 ம் நூற்றாண்டு வரையும் சிங்கை ஆரிய மன்னர்களாலும், ஈற்றில் சங்கிலி அரசனாலும் ஆளப்பட்டது. இக்காலத்தில் சைவசமயமும் சைவக்கோயில்களும் சிறப்புற்று விளங்கின. அதன் பின்னர் பறங்கியராலும் ஆங்கிலேயராலும் ஏறக்குறைய நான்கு நூற்றாண்டு காலம் ஆளப்பட்டது. சங்கிலி அரசனின் ஆட்சிக்குப்பின் அதாவது பறங்கியர் ஆட்சி ஆரம்பித்த போது சைவக் கோயில்கள் பெரும்பாலும் தரைமட்டமாக்கப்பட்டன. நல்லூரில் சிறப்புற்று விளங்கிய கைலைநாதர் கோயில் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டதென்று சொல்லப்படுகின்றது. அக்காலத்தில் சித்தி விநாயகர் கோயில் இடிபடாது தப்பியிருப்பது எங்ஙனம்.

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர்சங்கிலியன் போர் தொடுக்க மன்னாரிலிருந்து புறப்பட்டு வந்த பறங்கியரின் படை பூநகரியிலிருந்து வள்ளங்களிலின் மூலம் சாவகச்சேரியை அடைந்து நாவற்குழியில் இரவு தங்கி அடுத்தநாள் உப்பாற்றைக் கடந்து சுண்டிக்குழியிற்றங்கிப் போர் செய்ததென்று யாழ்ப்பாணச்சரித்திரம் கூறுகின்றது. (யாழ்ப்பாணச் வைபவ சோமுதி பக்கம் 95 பார்க்க) எனவே சித்திவிநாயகர் கோயில் பறங்கியர் சென்ற பாதையில் இருந்தமையால் அது பறங்கியர் அட்டூழியத்தினின்றும் தப்பியிருக்க முடியாது.

சங்கிலி மன்னன் மன்னாரிலிருந்த கத்தோலிக்கருக்குச் செய்த கொடுமைகளுக்குப் பழிக்குப்பழி வாங்காது விடமாட்டார்களென்று உணர்ந்த பிராமணர்களிற் சிலர் தத்தம் கோயில்களிலிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் விக்கிரகங்களையும் அப்புறப்படுத்தி விட்டு அதாவது சனநடமாட்டமில்லாத இடங்களில் மறைத்து வைத்து விட்டு தாமும் ஓடி ஒளித்திருப்பார்கள். அல்லது தமது தாய் நாடாகிய இந்தியாவுக்கே சென்றிருப்பார்கள். என்பதை சொல்லவும் வேண்டுமா? சித்திவிநாயகர் விக்கிரகமும் இவ்வாறே மறைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கத்தாட்சியாக இப்பகுதியில் கர்ண பரம்பரையாகப் பேசப்பட்டு வரும் வரலாறு ஒன்றுள்ளது. அரியாலை நீர்நொச்சித்தாழ்வு என்று வழங்கப்படும் புண்ணிய பூமியில் மாடு மேய்த்து வந்த சிறுவர்கள் தாங்கள் கொண்டு சென்ற மாடுகளை மேயவிட்ட பின்னர் கூடி விளையாடுவது வழக்கம் என்றும் ஒருநாள் அவர்கள் விளையாடும் போது தற்செயலாகப் பற்றையொன்றினுள் சித்திவிநாயகர் விக்கிரகம் ஒன்றைக் கண்டெடுத்தார்கள் என்றும் அதன் பின்னர் அந்த விக்கிரகத்தை வைத்து சுவாமி விழளையாட்டை விளையாடி வந்தனர் என்றும் அதனை அறிந்த பெரியோர்கள் அவ்விடத்திலேயே சித்திவிநாயகருக்கு ஓர் கோயில் கட்டுவித்தார்கள். என்றும் பேசப்பட்டு வருவதே அவ் வரலாறு ஆகும்.

அரியாலை நீர்நொச்சித்தாழ்வு என்னும் புண்ணிய பூமியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் விக்கிரகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்ததென்றும் நமது முன்னோர்கள் அதனைப் பேணிப்பாதுகாத்துக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்த வழிபட்டு வந்தார்கள். என்றும் அன்று தொட்டு இன்று வரை நித்திய நைமித்திய பூசைகளை ஆற்றி இஷ்ட காமிய மோட்சார்த்தங்களைப் பெற்று வந்தார்களென்றும் அப்பெருமானின் பேரருட்டிறத்தால் அரியாலையூர் எல்லா வகையிலும் சிறந்து விளங்குகிறது என்றும் சொல்லப்படுகின்றது.

சித்தி விநாயக

யோக ஆசனம் செய்யும் முறை:

யோக முத்ரா ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தொப்பையை விரைவில் குறைத்துவிடலாம். மேலும் முதுகு வலி, சிறுநீரக பிரச்னை, தண்டுவட பிரச்சனை என பல பிரச்சனைகளை இந்த யோக முத்ரா ஆசனம் சரி செய்கின்றது.

காலையில் எழுந்து வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்ய சிலருக்கு நேரம் இருக்காது. இந்த நேரமில்லா நேரத்தில் நீங்கள் காலையில் எழுந்து வீட்டிற்குள்ளேயே ஒரு பத்து நிமிடம் இந்த யோக முத்ரா ஆசனத்தை செய்யலாம்.

யோக முத்ரா ஆசனம் செய்வதால் மன அழுத்தம் கூட நீங்கும். நீண்ட நேரம் கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இந்த ஆசனத்தை செய்வதால் முதுகுத்தண்டுவடத்தில் நல்ல வளைவு ஏற்படுவதோடு, முதுகு வலி வருவதும் தடுக்கப்படும்.

யோக முத்ரா ஆசனத்தை செய்வதால் நாம் அடையும் பயன்கள்:

இந்த யோக முத்ரா ஆசனம் செய்யும் போது வயிற்றுப் பகுதி அதிகம் அழுத்தப்படுவதால், வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும்.

இறுக்கமான தசையை தளர்த்தி, உடலை ரிலாக்ஸ் செய்யும்.

சீராக செயல்படாமல் இருந்த குடல்கள் நன்கு செயல்பட்டு, அதனால் செரிமானம் நன்கு நடைபெற்று, கழிவுகள் குடலின் வழியே வெளியேறும்.

சிறுநீரக மண்டலம் எவ்வித தங்குதடையின்றியும் நடைபெற யோக முத்ரா உதவும்.
சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் குணமாகும்.

நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும்.

உடலின் தண்டுவடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் அனைத்தும் வலிமை பெற்று உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, அதனால் ஏற்படும் வேறு பல பிரச்னைகளையும் தவிர்க்கலாம்.

முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த யோகா முத்ரா ஆசனத்தை செய்து வந்தால், முதுகு வலி நீங்கிவிடும்.


யோக முத்ரா ஆசனம் செய்யும் முறை:

* முதலில் பத்மாசனம் நிலையில் அமரவும்

* பின்னர் கைகளை பின்னே மடித்து, வலது கை இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொள்ளவும்.

* இப்பொழுது மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொடவும் இப்படி 30 வினாடிகள் செய்யவும்.

* பின்னர் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழவும். இப்படி தினமும் 3 முறை செய்து வர வேண்டும்.

பொது அறிவு கேள்வி பதில்கள்

பொது அறிவு கேள்வி பதில்கள்
1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை
11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
12.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
19.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்
27.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
28.நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்
29.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949
30.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்
32.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
33.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
35.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
36.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
37.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்
39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
41.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
42.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்
48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்
50.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை
51.குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க? சோம்பல்
52.இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்? கட்டளை வாக்கியம்
53.மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக? பண்புப்பெயர்
54.வாழ்க இலக்கணக்குறிப்பு?வியங்கோள் வினைமுற்று
55.தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொடர்
56.ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை
57.முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர்
58.வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்
59.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்
60.தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்
61.தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்
62.இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்
63.மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை
64.சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு
65.ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்
66.டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக அமைப்பின் கூறுகள்
67.ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி
68.200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்
69.உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்
70.பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982
71.எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது
72.காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915
73.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957
74.தி.மு.கவை நிறுவியவர் யார்? அண்ணாதுரை
75.தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ
76.சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்
77.கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று வானம்பாடி
78.தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? கோமல் சுவாமிநாதன்
79.ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது? குளத்தங்கரை அரச மரம்
80.குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம்