Home » » தாயம் விளையாட்டு தோற்றம், வளர்ச்சி

தாயம் விளையாட்டு தோற்றம், வளர்ச்சி

தாய விளையாட்டு பெண்கள் விளையடும் அக விளையாட்டுகளில் முக்கியமானது ஆகும். தாய விளையாட்டின் தோற்றம் போரில் படை வீரர்களை நகர்த்தி செல்வது போன்ற செயல்களை வெளிப்படுத,துவதாக அமைகிறது. கட்ட விளையாட்டின் பண்புகள், அதிகளவில் தாய விளையாட்டில் காணப்படுகிறது. ஆனால் ஆண்கள் விளையாடும் தாயகட்ட விளையாட்டு அறிவுத்திறனை மையமாகக் கொண்டது. பெண்கள் விளையாடும் தாயகட்ட விளையாட்டு வாய்ப்பு நிலையை மையமாக்க் கொண்டது. இவ்விரு விளையாட்டுகளும் போர் முறைகளை விளக்குவதாக அமைந்துள்ளன.கட்ட விளையாட்டிலிருந்து தாய விளையாட்டு வேறுபட்டிருந்தாலும், கட்ட விளையாட்டின் வளர்ச்சி தாய விளையாட்டின் தோற்றத்திற்கு உதவியாக இருந்திருக்ககூடும். தாய விளையாட்டிலிருந்து பகடை, தசாபதம், அஷ்டாபதம், சதுரங்கம், (செஸ்) தோன்றி இருப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. குறைந்தது இரண்டு பேர்கள் விளையாடும் விளையாட்டு இது.

பெயர்க்காரணம் :

' தாயம் ' என்ற சொல்லுக்கு 'உரிமை' என்று பொருள் உண்டு. உறவுகாரர்களை தாயத்தார் என்று கூறுவது இதற்குச் சான்றாகும்்இதைப் பற்றிய குறிப்புகள்
தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் பந்தயம் கட்டுவார்கள். அப்பந்தயம் பொருள் தங்களை வந்தடைய வேண்டுமென்று உரிமை கருதி ஈடுபடுவதால் 'தாயம்' என்ற பெயர் வந்திருக்கலாம்.சோழிகளை குலுக்கி போடுகையில் 'ஒன்று' விழுந்தால் 'தாயம்' என்று கூறுகின்றனர். ஆனால் மற்ற எண்களை இரண்டு, மூன்று என்றறே கூறுவது குறிப்பிடதக்கதாகும்.நடைமுறையில் நாம் ஒரு செயலைக் காணலாம். ஒரு தொழிலைத் தொடங்கும் போது 'இலாபம்' என்று கூறுகின்றனர் அவற்றை போலவே தாயம் என்ற சொல்லும் தானே வெற்றி பெற வேண்டும்.என்ற ஒரு சொல்லாகவும் நாம் இதைக்கருதலாம்.

விதிமுறைகள் :

சோழியில் முதலில் 'தாயம்' போட்டால்தான் காய்களை கட்டத்தில் வைத்து தொடங்க முடியும்.சோழிகளில் விழும் எண்களுக்குத் தகுந்தவாறு வலப்புரமாக காயினை நகர்த்தி வரலாம். எதிரியின் காய்களை குறியீடு இல்லாத கட்டங்களில் சுற்றும்போது வெட்டிவிடவேண்டும்.ஒருவர் காயிருக்கும் கட்டத்தில் இன்னொருவரின் காயினை வைக்க நேர்ந்தால் அதற்கு வெட்டுதல் என்று பெயர்.வெட்டினால்தான் காய் உள்கட்டத்திற்குள் செல்லவியலும். குறியிடப்பட்ட கட்டம் எவருக்கும் சொந்தமில்லை. யாருடைய காய் வேண்டுமனாலும் குறியீட்டுக் கட்டத்தில் தங்கலாம். நான்கு அல்லது ஆறு காய்களை யார் முதலில் பழமாக்குகின்றாரோ அவர் வெற்றி பெற்றவராவார்.மேலும் இந்த விதிமுறைகள் ஒவ்வொரு வகை தாய வரைபடத்திற்கேற்ப மாறுபடும்.

நான்கு சோழிகள் எண்ணிக்கை விதிமுறை எண்ணிக்கை
1. நான்கு சோழியும் கவிழ்ந்திருந்தால் 8
2. மூன்று கவிழ்ந்து ஒன்று திரும்பியிருந்தால் 1
3. இரண்டு கவிழ்ந்தும் இரண்டு திரும்பியிந்தால்2
4. ஒன்று கவிழ்ந்திம் மூன்று திரும்பியிருந்தால் 3
5. நான்கு சோழியும் திரும்பியிருந்தால் 4

இவற்றில் 8,1,4 விழுந்தால் மீண்டும் ஆட வாய்ப்புண்டு இவ்விதிமுறை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும்.

வகைகள் :

தமிழக கிராம்ப்புரங்களில் தாய விளையாட்டில் பல வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஐந்து வகைகள் குறிப்பிடத்தக்கவை. நான்கு கட்ட தாயம், தஞ்சாவூர்க் கட்டம், குரங்காட்டம் போன்றாவையாகும்.

பயன்கள் :

தாய விளையாட்டின் வாயிலாக பல அறிவுத்திறன் சார்ந்த செயல்கள் அதிகரிக்கின்றன. காய்களை நகர்த்துவதற்கு நுண்ணிய அறிவுத்திறன் தேவைப்படுகிறது. எதிரியின் காய்களை வெட்டுவதற்கு அதிகமான சிந்தனைத்திறன் தேவைப்படுகிறது. கணித அறிவு வளர்வதற்கும் தாய விளையாட்டு உறுதுணையாக அமைகிறது. தாய விளையாட்டில் அறிவுத் திறன் மட்டுமின்றி வாய்ப்புநிலை இயல்பும் உள்ளடங்கியது என்று குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக