முன்னொரு காலத்தில் சபாபதி மாரிமுத்து (செட்டியார்) பெரும் வர்த்தகராவார். இவர் திருமணமாகி பல வருடங்களாக பிள்ளை செல்வம் இல்லாது வருந்திய போது பிள்ளை செல்வம் வேண்டி சாந்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு 1949 ஆம் ஆண்டளவில் மணிக்கோபுரத்தை கட்டிக்கொடுத்தார் இதன் பயனாக 1951 ஆம் ஆண்டளவில் புத்திரனை பெற்றெடுத்தார் .அதன் பின் மூன்று பிள்ளைகளுடன் சீரும் சிறப்பிடனும் வாழ்ந்தனர் என அறிய முடிகிறது விநாயகப்பெருமான் இது போன்று பல வேண்டு கோலை நிறை வேற்றி வைத்துள்ளார் .
கடந்த முப்பது வருடங்களிற்கு மேலாக நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போதும் இவ்வாலயத்திற்கு எதுவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது இவ்வாலயத்தில் அருகில் வசித்து வந்த மக்களிற்கு எதுவிதமான ஆபத்துக்கள் ஏற்படாவண்ணம் பாதுகாத்ததாகவும் இக்கிராம மக்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகள் சென்று சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருவதால் இவ்வாலயத்திற்கு பண உதவிகளை அள்ளி வழங்கி வருகின்றனர் .
அண்மையில் நடந்த அற்புதம்
2009 ஆம் ஆண்டு விநாயகர் குழந்தை வடிவில் நடந்து உலகளாவிய தேசமென்று அடியார்கள் வியந்து போற்றுகின்றனர். குழந்தையின் பாதம் போன்ற வடிவமைப்பில் தம்ப மண்டப வாயினிலே பாதத்தடயங்கள் தென்படுகின்றன. வடக்குப்பக்கத்தில் இவ் திருப்பாத அடையாளத்தை இன்றும் தம்ப மண்டப வாயினில் காணலாம். இவ்வியக்கத்தக்க அதிசய அற்புதம் சித்தி விநாயகரின் விளையாட்டுக்களில் ஒன்றாகும். இது போன்று அதிசயங்கள் தற்பொழுதும் நடைபெறுகின்றது. யாதெனில் ஆலய மூலஸ்தானத்தில் இருந்து இரவில் வெளியே வருவது போன்ற காட்சியும் வெளி வீதிகளில் உலாவி திரிவதாகவும் தற்போது கோவிலில் தங்கியிருந்து வேலை செய்தவர்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கிறது.
புலம்பெயர் தமிழர்களின் வேண்டுகோளின்படி இவ் ஆலயத்தை புனருத்தானம் செய்து கொடியேற்றத்துடன் கூடிய தேர், தீர்த்த திருவிழாவை நடாத்துவதற்குரிய கலந்துரையாடலுக்கு அமைவாக புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் பாரிய திருப்பணி வேலைகள் நடை பெற்றது.
இந்த ஆலயம் ஆரம்பத்தில் இலுப்பை மரத்தடியில் ஓலைக்கொட்டிலில் வைத்து வணங்கியதாகவும் பின்னர் 1945 ஆம் ஆண்டளவில் கோவிலை பராமரித்து வந்த பரம்பரை உரித்தாளர் ஆருமுகச்செட்டியாரும், சிவசம்பு ஐயாவும் சேர்ந்து ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் புனருத்தானம் செய்து சிறிய ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் செய்து அதனை தொடர்ந்து நித்தியா நைமித்திய பூசைகளும் ஒழுங்காக செய்து வந்தனர் .
ஆறுமுகச்செட்டியார் இல்லாத காலத்தில் மகன் பஞ்சாட்சர செட்டியார் பல காலமாக பராமரித்து வந்த இவ்வாலயத்தை அவர்தான் பிள்ளைகளுடன் வாழ விரும்பி வெளிநாடு சென்ற போது இவ்வாலயத்தை ஊர்மக்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். அப்போது இவ்வாலயத்தின் பிரதம குருவாக சிவஸ்ரீ சோ.நடராஜக்குருக்களும், அர்ச்சகராக இரத்தினசாமி ஐயாவும் சேர்ந்து பூசைகளை ஒழுங்காக செய்து வழிபடுவோருக்கு உதவியாக இருந்து வந்தனர் .
இவ்வாலயம் இதுவரைக்கும் பூரணமாக ஆகம விதிப்படி அமைக்கப்படாததால் ஊர் மக்களின் விருப்பபடி பரிபாலன சபையும் திருப்பணி சபையும் தெரிவு செய்யப்பட்டு சிறந்த முறையில் நிர்வாகிக்கப்பட்டு வந்ததுடன் பிரமாதி வருடம் 17 ஆம் திகதி (01 -07 -1999 ) வியாழக்கிழமை பாலஸ்தாபனம் செய்யப்பட்டது ஆலயத்திருப்பணி வேலைகள் சிலவற்றை செய்யப்பட்ட காலகட்டத்தில் ஆலயதிற்கேற்ப மூல விக்கிரகம் அமையாததால் அந்த விக்கிரகங்களை மாற்றியமைக்க முற்பட்ட போது ஊர்மக்களின் விருப்பப்படி பழங்காலந்தொட்டே பூசித்து வந்த விக்கிரக விநாயகருக்கே மங்களகரமான விஷ வருடம் ஐப்பசி திங்கள் பன்னிரண்டாம் நாள் 29 -10 -2001 திங்கட்கிழமை சித்தயோக முகூர்த்ததில் திரயோகத்திதியிலும், உத்தரட்டாதி நட்சத்திரமும் கூடிய காலை 09 .38 மணி தொடக்கம் 11 .34 வரை உள்ள தானு இலக்கின சுப முகூர்த்த வேளையிலும் (கட்டுவன் ஐயப்ப சாமி திருக்கோவில்)ஆகம கிரியா விபுதர் சிவஸ்ரீ ஆறுமுக குருக்கள் அவர்களால் புனராவர்த்தன பஞ்சகுண்ட பட்ஷய மகா கும்பாவிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அருள் ஆசியுரையை (நல்லை ஞான சம்பந்தர் ஆலயம் )ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வழங்கினார். சுவாமிகளின் அருளாசியுடன் நாற்பத்தியெட்டு நாள் மண்டலாபிஷேகமும் நடை பெற்றது:(1008) நவோச்திரசகஸ்ர சங்காபிஷேகமும், எம்பெருமானின் அடியார்களின் ஒத்துழைப்புடன் முத்து சப்பறத்தில் வீதியுலா வந்த அருங்காட்சியும், அன்னதானமும் நடைபெற்றன .
மூலஸ்தான விநாயகப்பெருமான் பழங்காலந்தொட்டே பூசித்து வரப்பட்ட சில விக்கிரக விநாயகரே மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய எழுந்தருளி விநாயகர் (சிறிய) சபை மண்டபத்தில் உள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்ற அடுத்த ஆண்டான 2002 ஆம் ஆண்டு 2.5 அடி உயரமுள்ள பஞ்சமுகப்பிள்ளையார் நிர்மாணிக்கப்பட்டு புதிதாக ச்ச்தாபிக்கபட்டுள்ளது. இப்பஞ்சமுகப்பிள்ளையார் திருக்காட்சியை சபை மண்டபத்தில் காண்பீர் .
பேரலையுடன் வந்த விக்கிரகங்களை இலங்கை இந்திய வர்த்தகர்கள் ஆகிய செட்டிமார்கள் தங்களுடைய காவல் தெய்வங்களாக அண்மித்த இடங்களில் வணங்கினர். சந்தோசி நகரில் (சாந்தை) ஸ்ரீ சித்தி விநாயகர் விக்கிரகத்தையும், முருகன் விக்கிரகத்தையும். சாந்த ஊளை கிராமத்தில் சம்புனதேச்வரர் விக்கிரகத்தையும் சுழிபுரம் வடக்கில் கண்ணகி அம்மன் விக்கிரகத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். தற்போது எங்கள் ஆய்வின் படி சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் விக்கிரகத்தையும், முருகன் விக்கிரகத்தையும் பஞ்சாட்சர செட்டியாரின் வம்சா வழியான ஆறுமுக செட்டியார் இகந்தர் செட்டியார், வினாசித்தமி செட்டியார் போன்ற வம்சாவலியினரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதாக அறியமுடிகிறது .
சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு வடக்கு புறமாக முருகப்பெருமான் கோவில் அமைக்கப்பட்டு இருந்தமைக்கான பழைய கட்டிட இடிபாடுகள் மூலம் அறிய முடிகிறது .இவ்வாலயத்திற்கு சற்று தொலைவில் மேற்கு பக்கமாக குருக்கள் வரவை என்ற பெயரும் வயல்வெளிகளிற்கு வழங்கப்பட்டு வருகிறது .இந்த வகையான பல சான்றுகள் மூலம் ஆலயத்தின் பழமையான நிகழ்வுகளை வெளிப்படுத்துவனவாக உள்ளன .

0 கருத்துகள்:
கருத்துரையிடுக