Home » » எவ்வாறு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்

எவ்வாறு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்

1.
கடுமையான இருமல் இருந்தால், மூன்று கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

2. பல் வலி குறைய, துளசி இலை இரண்டு, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை, வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும் வலி குறையும்.

3. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க, குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

4. ரத்த அழுத்தம் குறைவா இருக்கறவங்க... 30 கிராம் இஞ்சியை தண்ணி விடாம அரைச்சு சாறு எடுத்து, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து குடிச்சீங்கனா... அடுத்த அஞ்சு, பத்து நிமிஷத்துல ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்துடும். இதனால வரக்கூடிய தலைவலியும் நின்னுடும்.

5. வயித்துப்புண்ணால கஷ்டப்படுறவங்க கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும். மூக்கடைப்பு, மூக்குல சதை வளர்ந்து அவதிப்படுறவங்க கொத்தமல்லி துவையலை ஒரு கொட்டைப்பாக்கு அளவு தினமும் சாப்பாட்டுல சேர்த்து வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும்.

6. குழந்தை பெற்ற பெண்கள் உடலில் போதுமான சக்தி இருக்காது. அவர்கள் அரைக்கீரையைக் கடைஞ்சி சாப்பிட்டால் நல்ல பலம் கிடைப்பதுடன் குழந்தைக்கு தேவையான பாலும் சுரக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக